Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Tuesday, June 5, 2012

மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக மன்னிப்பு கேளுங்கள் !

நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

அன்போடு கட்டித் தழுவுங்கள்
கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். அன்பு பன்மடங்காகும்.

 அன்பான அக்கறை
அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகிறது. பலர் ஆதரவற்றோராக தவிக்கவிடப்படுகிறார்கள். அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால்! குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

நம்பிக்கை அவசியம்
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.

புரிந்து கொள்ளுங்கள்
புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.

மன்னிப்பு கேளுங்கள்
கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!



மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ, அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்
நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம். ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக. அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

நேர்மறையாக கவனியுங்கள்
உங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் மணம் மிக்க மலர்கள் மலர நீங்கள் ஊற்றும் உற்சாக தண்ணீர் அது. தினம் தினம் நீங்கள் கண்டறிந்து பாராட்டும் பட்சத்தில் உங்கள் மனைவி எந்த தவறான செயலும் செய்ய நினைக்கமாட்டார்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு காரணமே எதிர்பார்ப்புதான். தனக்கு ஏற்றார்போல தன் மனைவி மாறவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கின்றனர். இது தவறான செயல். உங்கள் மனைவி எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய செயலுக்கு அங்கீகாரம் அளியுங்கள். அப்புறம் பாருங்கள். அலைகடலென வரும் மனைவியின் அன்பில் மூழ்கிப்போவீர்கள்.

மிகச்சிறந்த பரிசு
பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் பெண்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்.

திறமையை கண்டறியுங்கள்
அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன. பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும். மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

உற்சாக டானிக்
பாராட்டுத்தான் உங்கள் மனைவிக்கு உற்சாகம் தரும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


திருமணத்திற்கு அப்புறமும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' இருக்கலாமே!



How Improve Your Relationship With Your Spouse Aid0174
காதலிக்கும்போது காதலர்கள் நிறைய பேசுவார்கள். உள்ளூர் விசயம் முதல் உலக விஷயங்களை மணிக்கணக்கில் உட்கார்ந்து அலசுவார்கள். ஸ்வீட் நத்திங்ஸ் எனப்படும் இந்த பேச்சின் போது சின்ன விஷயத்தைக் கூட காரணமே இல்லாமல் ரொம்ப நேரமாக வறுத்தெடுப்பார்கள். ஆனால் அதே தம்பதியர் திருமணம் ஆன பின்னால் பேசக்கூட நேரம் கிடைக்காமல் தடுமாறுவார்கள். இதனால்தான் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் எழுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு பேச்சுக்கள் குறைந்து போய் உடல் ரீதியான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பலரின் வழக்கம். இது அசாதாரணமானதல்ல, இயல்பான விஷயமும் கூட. அதேசமயம், அதிக அளவிலான பேச்சுக்கள் கணவன் மனைவியாகட்டும், காதலர்களாகட்டும், உறவை வலுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

மன ரீதியான உறவு
உடலும், உடலும் இணைந்தால்தான் உறவா, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் மனைவிக்கு உதவுவது, சின்னச் சின்ன வேலைகளில் இணைந்து ஈடுபடுவது என்று செய்யலாம். இவையெல்லாம் இருவரின் அன்பையும் நெருக்கமாக்க உதவுகிறதாம்.

சின்ன சின்ன உதவிகள் 
வார விடுமுறை நாட்களில் மனைவிக்கு சின்னதாய் சில உதவிகள் செய்தால் அலாதிப் பிரியம் வருமாம். பெரிதாக செய்யக் கூடத் தேவையில்லை. காய்கறி நறுக்கிக் கொடுக்கலாம், அடுப்பில் ஏதாவது வைத்திருந்தால் அதை கவனிக்கலாம். மனைவி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம். கொடுக்கிற சாக்கில், சின்னதாக ஒரு முத்தம் வைக்கலாம். இதெல்லாம் மனைவியருக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறதாம்.

அடடா, இப்படி ஒரு கணவர் கிடைக்க புண்ணியம் செய்திருக்கணும் என்ற சந்தோஷத்தில், சாப்பாட்டில் உப்பு, காரமெல்லாம் கரெக்ட்டாகப் போட்டு சமைத்துக் கொடுப்பார்களாம்.

மனதிற்கு இதமான மலையேற்றம்
வார விடுமுறையில் சினிமா, பீச் என்று போவதைப் போல மலையேற்றமும் நல்லதொரு அனுபவம் தரும். நிறையப் பேருக்கு இந்த டிரக்கிங் தரும் இனிய அனுபவம் குறித்த ஞானம் இருப்பதில்லை. ஆனால் உண்மையில் ஜோடிகளாக இதுபோன்றவற்றில் ஈடுபடும்போது மிகுந்த உற்சாகம் பிறக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது, அனுபவித்தால்தான் தெரியும். கணவனும், மனைவியுமாக போகும்போது நிச்சயம் வித்தியாசமாக உணர்வீர்கள். இது உடல் ரீதியாகவும் இருவரையும் பிட் ஆக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் கொடுக்கும். வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.


காரோட்ட கத்துக்குடுங்க
குக்கிங், டிரக்கிங் என இவற்றில் இப்படி ஒரு கிக் இருக்கிறது என்றால், டிரைவிங் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். உங்களது மனைவி வாரம் முழுவதும் வாகனத்திலேயே செல்பவராக இருந்தால், விடுமுறை நாளில் அவரை உட்காரச் சொல்லி நீங்கள் ஜாலியாக கூட்டிச் செல்லுங்கள். வாகனம் ஓட்டத் தெரியாத மனைவியருக்கு வாகனம் ஓட்டச் சொல்லித் தரலாம். இது காதலையும், அன்பையும் அதிகரிக்க வைக்கிறதாம். பரிவோடும், பாசத்தோடும், கவனத்தோடும், காதலோடும், கவலையோடும் வண்டி ஓட்டச் சொல்லித் தரும் கணவர்களை மனைவியருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

உடல் ரீதியான உறவை விட இதுபோன்ற அக்கறையான அணுகுமுறைதான் மனைவியருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார்கள். அதுக்காக, வண்டியை இப்படி ஓட்டேன், ஏன் பிரேக் பிடிக்கிறே, கியரைப் போடாதே, யாரைக் கேட்டு திருப்பினே என்று டென்ஷனாக கத்திச் சொல்லித் தர வேண்டாம். அது ‘விபத்தில்’ போய் முடிந்து விடும் என்றும் எச்சரிக்கின்றனர். 

காதல் பார்வையுடன் இதுபோன்ற சுவாரஸ்யங்களையும் கலந்து பாருங்கள், வாழ்க்கை மகா இனிமையாக இருப்பதை உணர்வீர்கள். என்ன இந்த வார விடுமுறையை இன்பமானதாக மாற்ற தயாராகிவிட்டீர்களா?

Saturday, November 20, 2010

பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்!


Coupleமனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.

செக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது - திருணம் செய்தவர்களுக்கு. அதே சமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

தன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவி யோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும்.

செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்... இப்படி நிறைய இருக்கிறது.

எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது. செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.


Tuesday, October 19, 2010

மனைவியை மயக்க…!


என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.


திருமணமான புதிதில் கணவன்மார்கள் ஏன் அம்மா பிள்ளையாக இருக்கிறார்கள்













Thursday, August 12, 2010

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்...

Sex
மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி 'ஹார்டுவேர்' போல 'சாப்ட்வேரும்' அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் 'ஹார்ட்' ஆக இருக்க வேண்டியதில்லை. 'சாப்ட்' ஆகவும் இருப்பது அதீத அவசியம்.

எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.

வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. 

'வெரைட்டி'யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். 

அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு 'ஆட்டத்தில்' இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.

அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு 'பிளான்' செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை.

உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, 'இன்னிக்கு என்ன பன்னப் போறானோ' என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல 'பொசிஷன்' குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் - முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.

செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும். முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை!

மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர் ஷர்மிளா




திருமணம் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் நிகழும் தித்திக்கும் திருப்பு முனை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதற்கு நேரிடையாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாமல் பார்த்தால் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத்தான் இப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அண்மை காலங்களில் ரொக்கத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதனால் பல குடும்பங்கள் சீரழிந்த கதையையும் நாமறிவோம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமண உறவு இனிக்கவும் மணக்கவும் செய்ய வேண்டாமா? நேற்று வரை நீயாரோ, நான் யாரோ, என்றிருக்கும் இரண்டு உள்ளங்கள் திருமணம் என்கின்ற உறவு வளையத்துக்குள் நுழைந்து இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்று வாழ்க்கையின் ஆத்திச்சூடியை ஆரம்பிக்கும் இவர்களின் இல்லற பாடம் ஆயுளின் அந்திவரை வாசம் வீச வேண்டாமா? வீச வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்.

பெரிய வித்தை ஒன்றும் இல்லை. எந்த பல்கலைக்கழகங்களிலும் சென்று பாடம் படிக்க தேவையில்லை. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி... என்கிற அடிப்படையில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் கதைதான் நமக்கு பால பாடம். இல்லறம் சிறக்க மணமக்களுக்கு எளிய சில ஆலோசனைகள். இதில் இரண்டு விதமான ஆலோசனைகள் அவசியம் ஆனது. ஒன்று மனோரீதியானது இன்னொன்று உடல் ரீதியானது.




கருத்து ஒற்றுமை



தம்பதிகள் இரு வரும் கருத்தொருமித்த வர்களாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டுதான் நம் பெரியவர்கள் ஈருடல் ஓருயிர் என்றார்கள். வாழ்க்கை யெனும் ஒரு வழிப்பாதையில் இருவர் பயணிக்கும்போது ஒருமித்த கருத்து அமைந்திருக்கு மெனில் வாழ்க்கை இனிக்கும். அன்பு மணக்கும். கருத்து ஒற்றுமை நிகழமணமான புதிதில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும். ஒருவர் பேச்சை இன்னொருவர் கேட்க வேண்டும். சுதந்திரமாக பேசருவர் இன்னொருவரை அனுமதிக்க வேண்டும்.



புரிந்துகொள்ளல் அவசியம்



மனைவிக்கு தெரியும்படியாக அவளை புரீந்துகொள்ள முயற்சிக்காதே என்கிறார் ஓஸோ ரஜனீஷ். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை சங்கீதம் பிசிறின்றி, அதி பேதமின்றி, அபஸ்வரமாக அரங்கேறாமல், அதிசுத்த மாக வெளிப்பட கணவன் மனைவி பரஸ்பரம் புரீந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


நாம் எப்படி உணர்வுகள் கொண்டிருக்கின்றோமோ, அதே உணர்வு, தனது வாழ்க்கை துணைக்கும் தனது வாழ்க்கை துணைக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக பங்கேற்க இயலும். உன் புன்னகை என் இதழ்களிலும் தொற்றும், என் கண்ணீர் தீ உன் விழியிலும் பற்றும் என்பதுதான் அன்பான தம்பதியரின் மன இலக்கணம். இதனால் அன்பின் ஆழம் இன்னும் இன்னும் வேர்விட்டு பாயும்.


இன்றைய மணமக்கள்தான் நாளைய தம்பதிகள். இருவரும் இல்லறம் தொடங்கிய நாள் தொட்டு அன்பின் அடிப்படையில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வது அவசியம். பல தம்பதிகளிடம் நடைபெறும் சண்டைகளில் பிரதானமாக பரஸ்பரம், நம்பிக்கையின்மை இல்லாததை காண முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை வீண் சந்தேகத்தை விரட்டி அடிக்கும்.


கணவனோ, மனைவியோ, ஒருவர் மீதான இன்னொருவரின் பாராட்டுதல்கள், விமர்சனங்கள், ஊக்கமளித்தல் அவசியம் ஆகும். இதன் காரணமாக ஒருவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளை ஜீரணித்து கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். பாராட்டை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாதல்லவா. அதே சமயம் அதிகப்படியான பாராட்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தலாம் எச்சரிக்கை.


கணவன்தான் ஆண், தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்கிற ரீதியில் செயல்பட கூடாது. மனைவியும் அற்பதனமான விசயங்களை தனது பிரச்சினையாக்கி, அதற்கு கணவன் செவிமடுக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஒருவர் பிரச்சினையை இன்னொரு வர் பொறுமையாக கேட்க வேண்டும். விவாதிக்க வேண்டும். சரியான முடிவை நோக்கி ஆலோசிக்க வேண்டும்.


கணவனோ, மனைவியோ அழகுணர்ச்சி அவசியம். பெரும்பாலான தம்பதிகள் திருமணமான புதிதில் பாதுகாக்கும் தங்கள் அழகை, உடம்பை நாளடைவில் அக்கறையின்றி விட்டுவிடுவார்கள். இது தவறு. தங்கள் உடம்பை, அழகை பேணி பாதுகாப்பது தம்பதியருக்கு இனிமையான நிமிசங்களையும், நல்ல எண்ணங்களையும் உருவாக்கி தரும்.


இயல்பாக இருக்கும் பாலியல் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக மட்டுமே திருமணத்தை கருதாமல், பரஸ்பரம், அன்பையும், பரிவையும் காட்டும்படியான இணக்கத்துடன் தம்பதிகளிடையே பாலியல் உணர்வுகள் வெளிப்படவேண்டும்.

ஆரம்பத்தில் ஆர்டீசியன் ஊற்றாய் பெருக்கெடுக்கும் செக்ஸுவல் உணர்வுகளும், பரிமாற்றங்களும் காலப்போக்கில் குறைந்துபோய்விடுவதும்கூட பல தம்பதிகளிடைய நிகழ்கிறது. இப்படி அல்லாமல் வாழ்க்கையின் அடிநாதமாக செக்ஸ் உறவு தொடர்ந்து அமைந்திருக்கும் மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தம்பதியர்களுக்கு இடையேயான செக்ஸ் உறவு ஒப்பந்த அடிப்படையில் அமைந்திருக்கக்கூடாது. அத்தகைய பழக்கத்தையும் வளர்த்துக்கொள்வது தவறு. அதாவது, இதை வாங்கித்தாருங்கள், இதை நிறைவேற்றுங்கள், இதை பூர்த்தி செய்யுங்கள் என்று வர்த்தக தொணியில் செக்ஸ் பரிவர்த்தனை அமையக்கூடாது. வியாபாரத்திற்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கும். வாழ்க்கைக்கு பொருந்தாது. இத்தகைய மனச் சிக்கல்களை வளர்த்துக்கொண்டு இல்லற சுகம் காண்பதில் இடையூறுகளை அனுபவிக்க வேண்டாம். செக்ஸ் விஷயத்தில் ஒருவருக் கொருவர் வற்புறுத்தல்களோ, கட்டாயப்படுத்தலோ கூடாது. இதனால் சந்தோஷத்திற்கு இடைஞ்சல் ஏற்படலாம். ஒருவர் இன்னொருவர் விருப்பத்திற்கு இணங்காமல் போகலாம். ஆரம்பத்திலேயே இத்தகைய எண்ணங்களை இருவரும் தவிர்ப்பது நல்லது.உணர்வுகளை மதிப்பது, செக்ஸ் விஷயத்திலும் நடைபெற வேண்டும். உணர்வுகளை மதிக்காத தம்பதிகளிடையே பரஸ்பர செக்ஸ் பரிவர்த்தணை திருப்திகரமாக இருப்பதில்லை. இருவருக்கும் பொதுவான திருப்தி இதனால் தடைபடும்.

கணவன்-மனைவி இருவரும் செக்ஸ் விருப்பங்களை, தேவைகளை , சந்தேகங்களை விவாதித்து, தங்களுக்குள் செக்ஸ் அறியாமையை அகற்றிக்கொள்ள வேண்டும். இது அவர்களின் பாலியல் பரிவர்த்தணைக்கு மேலும் மெருகூட்டலாக அமையும். தகுந்த பாலியல் மருத்துவரை கலந்தாலோசிப்பதில்கூட தப்பில்லை.

புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு முன் மருத்துவ ஆலோகனை பெறுதலோ, பரிசோதனை செய்து கொள்வதோ தேவையற்ற ஒன்றாகத்தான் கருதப்படும். மிகவும் நெருங்கிய உறவில் மணமுடிப்பதை தவிர்ப்பது நல்லது.

திருமணத்தன்றே இல்லற சுகம் காணவேண்டும் என்பதில்லை. தம்பதியரின் விருப்பமே இதில் முக்கிமானது. முதல்நாள் பாலியல் உறவில் சங்கடங்களோ, கஷ்டமோ இருந்தால் கலங்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது இனிமையான ஒரு நாள். எல்லோருக்குமே சத்தான உணவு அவசியம்தான். மணமக்களும் இதனை கைகொள்வதில் தப்பில்லை. நல்ல மனம் மட்டுமல்ல நல்ல உடம்பும் அவசியம். உடம்பை கட்டுகோப்புடன் வைத்து அதனை களைந்தாலே போதும். நோயின்றி வாழ ஆரம்பித்து விடலாம்.

போட்டிகள், வாழ்க்கையில் தேவையற்ற எண்ணங்களை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படுதல், தகுதி மீறி வளர்ச்சி பெற துடித்தல், பணத்தின் மீதான ஆசை, பதவி மோகங்கள், புகழ் வெறி போன்றவைதான் மனிதனை இன்று ஆளாய் பறக்க வைக்கின்றன. இப்படியான சூழ்நிலையை களைந்து மனிதன் வாழ முற்பட்டாலே போதும். நிச்சயம் ஆரோக்யமுடன் வாழலாம்.

கடைசி நிமிடத்தில் ஆர்பரிக்க வேண்டிய கட்டாயம், எதையும் ஒத்திப்போடும் மனப் பான்மைகூட மனிதனை அவசர சக்திக்கு உள்ளாக்க நேரிடும். இப்படியான பழக்க வழக்கங்களை தவிருங்கள். அவசரம் உங்களை விட்டு ஓடியே போய் விடும்.

அடுத்து-அன்றைய பணியை அன்றே முடிக்க கற்றுக்கொள்ளுதல், நேரந்தவறாமை, செய்ய வேண்டிய பணிகளை மட்டும் மேற்கொள்ளுதல் போன்றவைகளாலும் அவசர கதியான வாழ்க்கை முறையை மாற்றலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக-போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். எனவே பொருளாதார விசயத்தில் நிறைவு பெறும் வகையில் பேராசையின்றி வாழுங்கள்.



Tuesday, August 10, 2010

வசியப்படுத்துவது எப்படி?

ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் இன்றும்கூட கிராமத்திலும், ஏன் நகரத்திலும்கூட பல பெண்கள் சாமியாடிகளிடம் குறிகேட்கச் செல்வதும், வசிய மருந்துகளைப் பயன்படுத்துவதும், ஜோதிடர்களைத் தேடி ஓடுவதும், முழந்தாளிட்டு மணிக்கணக்கில் பிரார்த்தனை செய்வதும் பல வீடுகளில் சர்வசாதாரணமாக நடக்கிறது.

அதேபோல வீட்டில் மனைவியோடு பிரச்சினை ஏற்பட்டால் அல்லது நெருக்கம் குறைந்து போனால் மது மற்றும் பிற மங்கையரை நாடுதல் போன்றவற்றில் ஆண்கள் ஈடுபடுவதையும் காணலாம். பிரச்சினை இதையும் தாண்டினால்தான் விவாகரத்து போன்றவை நடக்கின்றன.

நீங்கள் கணவனாக, அல்லது மனைவியாக... யாராக இருந்தாலும் உங்கள் இருவரில் யார் பிரச்சினைக்கு காரணமாக இருந்தாலும் அதனால் நீங்கள் இருவருமே பாதிக்கப்படுவீர்கள்.

அவ்வாறே, பிரச்சினையைத் தீர்க்க இருவரில் யார் ஒருவர் முன் வந்தாலும்... விட்டுக்கொடுத்தாலும் அதனால் வரும் இன்பம் இருவருக்குமே கிடைக்கும்.

இப்படியொரு இன்பம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


ரொம்ப சிம்பிள்...

நீங்கள் உங்களவரை வசியப் படுத்தவேண்டும்.

வசியப் படுத்துதல் என்றால் உடனே ஏதோ மந்திர மையை தலையில் தடவு வது அல்லது ஏதோ மருந்தை இட்லியில் வைத்துக் கொடுப்பது என நினைத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவரோ, மனோ தத்துவ நிபுணரோ செய்யும் மெஸ்மெரி சத்தையும், ஹிப்னாடிசத்தையும் கற்பனை செய்து பார்க்கிறார்கள்.

மாறாக, பேச்சால், செயலால், அன்பால் கவர்வதுதான் வசியப்படுத்துவது.நீங்கள் அவரை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.

மற்றவர்களை விட உங்களவர்தான் விசேஷமானவர் என நீங்கள் நினைத் திருப்பதாக அவருக்கு உணர்த்த வேண்டும், நீங்கள் எதைச் செய்தாலும் அதில் அவரது பங்களிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

அதாவது அவரை சந்தித்த போது நீங்கள் காட்டிய ரொமான்ஸ் உணர்வை மறுபடி புதுப்பிக்க வேண்டும். அப்போது பிரச்சினைகள் மறைந்து போகும்.


ரொமான்சை உருவாக்குதல்


கணவன் மனைவியிடையே காதல் உணர்வுகளை உண்டாக்குவதற்கு எது தடையாக இருக்கிறதோ அதை முதலில் தூக்கியெறியுங்கள். திருமணமான புதிதில் அவர் கோபித்துக் கொண்டிருந்தால் நீங்கள் வலியச் சென்று கோபத்தைத் தணித்திருப்பீர்களே.. அவர் உங்களை சத்தம்போட்டு திட்டி யிருந்தால் பதிலுக்கு எதிர்த்துப் பேசாமல் தணிந்து போயிருப்பீர்களே.. இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.



இது எப்படி உடனே சாத்தியமாகும்?

இதற்கெல்லாம் ஏதாவது ஓரிடத்தைத் தயார் செய்ய வேண்டாமா? நேரத்தை ஒதுக்க வேண்டாமா? நிறைய பணத்தை செலவழிக்க வேண்டாமா? எதுவுமே வேண்டாம். எந்த இடத்திலும், எந்த சூழலிலும், எந்த நேரத்திலும் இதை நீங்கள் சாதிக்கலாம்.

எப்படியெனில், காதல் உணர்வுகள் எல்லாருக்குமே இயல்பாக உண்டு, அதிலும் யாரிடம் சாதுர்யம் அதிகமிருக்கிறதோ அவர்களிடம் எப்படிப்பட்டவர்களும் விழுந்து விடுகிறார்கள். இந்த சாதுர்யமான காதல் உணர்வுகள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. உங்களிடமும் இருந்தது. அதை நீங்கள் உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் புதைத்து வைத்துவிட்டீர்கள். அதை தோண்டி எடுக்க வேண்டும். அதெல்லாம் மறந்துபோய் பல வருடங்கள் ஆகிவிட்டனவே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். அதற்கான வழி முறைகளை சுருக்கமாகச் சொல்கிறேன்.

அக்கறை செலுத்துங்கள்



சின்னச்சின்ன விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறைதான் உங்களவரின் சிந்தையை எப்போதும் நிறைத்துக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூட்டுக்குடும்பத்தில் இருப்பவராக இருந்தால் தனியாக மனம் விட்டுப் பேசவோ, சின்னச் சின்ன சேட்டைகள் செய்யவோ வாய்ப்புகளோ, பணிச் சுமைகளால் நேரமும் கிடைக்காது. இந்த நேரத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர் எதிர்பார்க்காத நிலையில் சின்னச்சின்ன முத்தங்கள், ஸ்பரிசங்கள் என அவரை சீண்டிக்கொண்டே இருக்கலாம். இல்லாவிட்டால், இதுவே அவரது மனதில் என்னை யாரும் கவனிப்பதே கிடையாது என்ற நெருடலையும், தனிமை உணர்வையும் உண்டாக்கிவிடும். இதைத் தவிர்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருக்கு உதவி செய்யுங்கள்.

மனைவி குடும்பப்பொறுப்புகள் போன்ற சுமைகளால் நெருக்கப்பட்டு இருக்கும் நிலையில், மாமியாராக இருந்து மருமகள் பிரச்சினையில் மாட்டிக்கொள் ளும் சூழலில் கண்ணீர் வடிக்க நேரிடும். இந்த நிலையில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. என அப்படியே உருகிக் காட்டவேண்டும். எதுக்கு இங்கேயே கிடந்து அல்லல் படுகிறாய்.. வா வெளியில் போகலாம் என வீட்டில் சொல்லிவிட்டு அவரை வெளியில் அழைத்துச் செல்லலாம். அவருக்குப் பிடித்தமானதை வாங்கித் தரலாம்.

அவர் வெளியில் செல்லும்போது வழியனுப்பிவைப்பது, இடையில் போனில் கூப்பிட்டுப் பேசுவது, சாப்பிட்டாயிற்றா? அதிகமாக வேலையை இழுத்துப் போட்டுக்கொள்ளாதே என்பது மாதிரி கரிசணம் காட்டுவது இப்படி.. எப்போதும் அவருடைய நினைவிலேயே நீங்கள் இருப்பதாகக் காட்டுங்கள்.

கவனம் செலுத்துங்கள்

மனைவி ஏதோ நினைவில் இருக்கும் போது அவரைக் கூப்பிட்டு, உன் இடுப்பு அழகு, உன் மூக்குதான் ரொம்ப அழகு.. என உங்களவரின் உடல் அழகைப் பற்றியோ அல்லது அவரது உடையைப் பற்றியோ நீங்கள் மேம்போக்காக சொல்லி வையுங்களேன்.. தனது மூக்கைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு தான் அவருக்கு வரும். அந்த உடையைப் பார்க்கும்போதெல்லாம் இது அவருக்கு நீங்கள் சொன்னதைத்தான் அவர் நினைத்துப் பார்ப்பார்.அவரிடம் எதை கவனிக்கிறீர்களோ, எது உங்கள் சிந்தனையைக் கவர்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துங்கள். இது நல்ல பலன் கொடுக்கும்.

மனம் விட்டுப் பேசுங்கள்


இன்ப துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள மனம் விட்டுப் பேசுங்கள், அது மட்டுமல்ல, அவருக்குப் பிடித்தமானதையே பேசுங்கள், உங்களவர் ஒரு கருத்தைச் சொன்னால் உடனே அதற்கு எதிர்த்துப் பேசுவதையோ, மறுத்துப் பேசுவதையோ செய்யாதீர்கள். இப்படியெல்லாம் நடந்து கொள்ளும்போது உங்களின் மீதுள்ள அன்பு அதிகரிக்கும்.


பிடித்ததை செய்யுங்கள்


உங்களவருக்குப் பிடித்தமானதை அவர் எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்து அசத்திவிட்டால் அவர் மயங்கி விடுவார். தினமும் மனைவி எழுந்துதான் காபி போட்டுக் கொடுக்கவேண்டும் என்ற எழுதாத நியதியை வைத்துக் கொண்டிருக்கிறோம். இதை மாற்றி நீங்கள் அவளுக்கு காபி போட்டுக் கொடுக்கலாம். சமையல் வேலைகளில் உதவி செய்யலாம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் விஷயங்களில் மனைவியோடு
ஒத்துழைக்கலாம்.

அவருக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் ஒருமுறை தெரிந்துகொண்டால் மறுமுறை அதை தவிர்த்துவிடலாம்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் மனைவியுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறே, கணவனுக்கு எது பிடிக்கும் என்பதைப் பார்த்துப் பார்த்து செய்யும்போது கணவன் அதில் திருப்தி யடைந்துபோவதோடு உங்களையும் திருப்திபடுத்த முயல்வான்.

குற்றங்குறை இல்லாமல் முழுமையாக இருப்பவர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மீண்டும் நேசிக்க ஆரம்பிக்கும் போது பிரச்சினைகள் மறைந்துபோகும்.