Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Tuesday, June 5, 2012

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!



மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ, அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்
நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம். ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக. அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

நேர்மறையாக கவனியுங்கள்
உங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் மணம் மிக்க மலர்கள் மலர நீங்கள் ஊற்றும் உற்சாக தண்ணீர் அது. தினம் தினம் நீங்கள் கண்டறிந்து பாராட்டும் பட்சத்தில் உங்கள் மனைவி எந்த தவறான செயலும் செய்ய நினைக்கமாட்டார்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு காரணமே எதிர்பார்ப்புதான். தனக்கு ஏற்றார்போல தன் மனைவி மாறவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கின்றனர். இது தவறான செயல். உங்கள் மனைவி எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய செயலுக்கு அங்கீகாரம் அளியுங்கள். அப்புறம் பாருங்கள். அலைகடலென வரும் மனைவியின் அன்பில் மூழ்கிப்போவீர்கள்.

மிகச்சிறந்த பரிசு
பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் பெண்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்.

திறமையை கண்டறியுங்கள்
அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன. பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும். மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

உற்சாக டானிக்
பாராட்டுத்தான் உங்கள் மனைவிக்கு உற்சாகம் தரும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


திருமணத்திற்கு அப்புறமும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' இருக்கலாமே!



How Improve Your Relationship With Your Spouse Aid0174
காதலிக்கும்போது காதலர்கள் நிறைய பேசுவார்கள். உள்ளூர் விசயம் முதல் உலக விஷயங்களை மணிக்கணக்கில் உட்கார்ந்து அலசுவார்கள். ஸ்வீட் நத்திங்ஸ் எனப்படும் இந்த பேச்சின் போது சின்ன விஷயத்தைக் கூட காரணமே இல்லாமல் ரொம்ப நேரமாக வறுத்தெடுப்பார்கள். ஆனால் அதே தம்பதியர் திருமணம் ஆன பின்னால் பேசக்கூட நேரம் கிடைக்காமல் தடுமாறுவார்கள். இதனால்தான் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் எழுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு பேச்சுக்கள் குறைந்து போய் உடல் ரீதியான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பலரின் வழக்கம். இது அசாதாரணமானதல்ல, இயல்பான விஷயமும் கூட. அதேசமயம், அதிக அளவிலான பேச்சுக்கள் கணவன் மனைவியாகட்டும், காதலர்களாகட்டும், உறவை வலுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

மன ரீதியான உறவு
உடலும், உடலும் இணைந்தால்தான் உறவா, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் மனைவிக்கு உதவுவது, சின்னச் சின்ன வேலைகளில் இணைந்து ஈடுபடுவது என்று செய்யலாம். இவையெல்லாம் இருவரின் அன்பையும் நெருக்கமாக்க உதவுகிறதாம்.

சின்ன சின்ன உதவிகள் 
வார விடுமுறை நாட்களில் மனைவிக்கு சின்னதாய் சில உதவிகள் செய்தால் அலாதிப் பிரியம் வருமாம். பெரிதாக செய்யக் கூடத் தேவையில்லை. காய்கறி நறுக்கிக் கொடுக்கலாம், அடுப்பில் ஏதாவது வைத்திருந்தால் அதை கவனிக்கலாம். மனைவி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம். கொடுக்கிற சாக்கில், சின்னதாக ஒரு முத்தம் வைக்கலாம். இதெல்லாம் மனைவியருக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறதாம்.

அடடா, இப்படி ஒரு கணவர் கிடைக்க புண்ணியம் செய்திருக்கணும் என்ற சந்தோஷத்தில், சாப்பாட்டில் உப்பு, காரமெல்லாம் கரெக்ட்டாகப் போட்டு சமைத்துக் கொடுப்பார்களாம்.

மனதிற்கு இதமான மலையேற்றம்
வார விடுமுறையில் சினிமா, பீச் என்று போவதைப் போல மலையேற்றமும் நல்லதொரு அனுபவம் தரும். நிறையப் பேருக்கு இந்த டிரக்கிங் தரும் இனிய அனுபவம் குறித்த ஞானம் இருப்பதில்லை. ஆனால் உண்மையில் ஜோடிகளாக இதுபோன்றவற்றில் ஈடுபடும்போது மிகுந்த உற்சாகம் பிறக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது, அனுபவித்தால்தான் தெரியும். கணவனும், மனைவியுமாக போகும்போது நிச்சயம் வித்தியாசமாக உணர்வீர்கள். இது உடல் ரீதியாகவும் இருவரையும் பிட் ஆக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் கொடுக்கும். வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.


காரோட்ட கத்துக்குடுங்க
குக்கிங், டிரக்கிங் என இவற்றில் இப்படி ஒரு கிக் இருக்கிறது என்றால், டிரைவிங் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். உங்களது மனைவி வாரம் முழுவதும் வாகனத்திலேயே செல்பவராக இருந்தால், விடுமுறை நாளில் அவரை உட்காரச் சொல்லி நீங்கள் ஜாலியாக கூட்டிச் செல்லுங்கள். வாகனம் ஓட்டத் தெரியாத மனைவியருக்கு வாகனம் ஓட்டச் சொல்லித் தரலாம். இது காதலையும், அன்பையும் அதிகரிக்க வைக்கிறதாம். பரிவோடும், பாசத்தோடும், கவனத்தோடும், காதலோடும், கவலையோடும் வண்டி ஓட்டச் சொல்லித் தரும் கணவர்களை மனைவியருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

உடல் ரீதியான உறவை விட இதுபோன்ற அக்கறையான அணுகுமுறைதான் மனைவியருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார்கள். அதுக்காக, வண்டியை இப்படி ஓட்டேன், ஏன் பிரேக் பிடிக்கிறே, கியரைப் போடாதே, யாரைக் கேட்டு திருப்பினே என்று டென்ஷனாக கத்திச் சொல்லித் தர வேண்டாம். அது ‘விபத்தில்’ போய் முடிந்து விடும் என்றும் எச்சரிக்கின்றனர். 

காதல் பார்வையுடன் இதுபோன்ற சுவாரஸ்யங்களையும் கலந்து பாருங்கள், வாழ்க்கை மகா இனிமையாக இருப்பதை உணர்வீர்கள். என்ன இந்த வார விடுமுறையை இன்பமானதாக மாற்ற தயாராகிவிட்டீர்களா?

Tuesday, August 10, 2010

ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள்

ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள் என்பதை பற்றி. இந்த லிஸ்டை பார்த்தாலே தெரிந்துவிடும் நம் மொத்த வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுப்பற்றிய ஒரு தெளிவு கிடைத்துவிடும்

ஒரு இளம்பெண் இளைஞனிடம் எதிர்பார்ப்பது




1. அழகாக
2. கம்பீரமாக
3. நல்ல வசதியுடன்
4. சொல்வதை பொருமையாக கேட்கணும்
5. கட்டான உடல் அழகு
6. நல்ல உடையணிய வேண்டும்
7. சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட வேண்டும்
8. ரொம்ப ரொமாண்டிக்காக இருக்கணும்












அதே பெண் 35 வயதுக்கு பிறகு என்ன எதிர்பார்ப்பாள்





1. பார்க்க சுமாரான தோற்றம்
2. ஓரளவு வசதி
3. கூட பேசிக்கொண்டு இருக்க வேண்டும்
4. வீட்டு சமையலை ரசித்து சாப்பிட வேண்டும்
5. வேலைகளில் கூட உதவி செய்ய வேண்டும்
6. ரங்கநாதன் தெரு.... எங்கே போனாலும் கூட முகம் சுளிக்காமல் வர வேண்டும்
7. எப்பவாவது திடீர்னு காலேஜ் பசங்க மாதிரி டிரஸ் போடணும் ( மத்தவங்க சிரிச்சாலும் கண்டுக்கபடாது)
8. நான் எந்த மொக்க ஜோக் சொன்னாலும் சிரிக்கணும்.













ஒரு பெண் 40 வயதுக்கு பிறகு ஆணிடம் எதிர்பார்ப்பது





1. ரொம்ப பார்க்கிறதுக்கு பக்கி மாதிரி இருக்க கூடாது.
2. நான் பேசினால் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கணும் தூங்க கூடாது
3. ஒழுங்கா வேலைக்கு போகணும்
4. தொப்பையை மறைக்கிற மாதிரி சட்டை போடணும் ( ஷார்ட் சட்டையெல்லாம் மறந்து விடணும்)
5. வாரத்துக்கு ஒரு முறையாவது ஷேவ் செய்யணும்

















50 வயதுக்கு மேல் பெண் எதிர்பார்ப்பது


1. பொது இடத்தில் எல்லார் முன்னாடியும் கண்ட இடங்களில் சொறிய கூடாது
2. அடிக்கடி கடன் வாங்க கூடாது
3. நேரம் கிடைக்கறப்பல்லாம் தூங்க கூடாது
4. ஒரே மொக்க ஜோக்கையெ பல முறை சொல்லி படுத்தகூடாது
5. எப்பவாவது ஒரு வாரமாவது ஷேவ் செய்ய வேண்டும்








60 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது 



1. சின்ன குழந்தைகளை பயமுறுத்த கூடாது
2. பாத்ரூம் எங்க இருக்குன்னு ஞாபகம் வச்சுக்கணும்.
3. குறட்டை சத்தம் மிக கம்மியாக இருக்கணும்
4. எப்பவும் வெறும் உடம்போடு இருக்க கூடாது
5. பல் செட்டு எங்க வைத்தோம் என்று ஞாபகம் இருக்கணும்
6. ஈசியா ஜீரணமாகிற உணவுதான் பிடிக்கணும்( பிரியாணி ஈசியா ஜீரணம் ஆகிடும்தானே)
7. கிழமை, தேதி எல்லாம் ஞாபகம் இருக்கணும்.







70 வயதுக்கு மேல் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது



1. நல்ல உயிரோடு இருக்கணும்
2. டாய்லட், பாத்ரூம் ஒழுங்கா போய்க்கணும்















80 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது







________________________________ ( ஒண்ணுமேயி்ல்லங்க அதான்)










சொன்னது எல்லாத்துக்கும் மேல பெண்ணும் சரி ஆணும் சரி எல்லா வயதிலும் எதிர்பார்ப்பது பரஸ்பர அன்பும் ஆதரவும்தான். எனவே கடைசிவரை காதலியுங்கள் (உங்கள் மனைவியை மட்டும்)