உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே
உன் பங்ச்சுவாலிட்டிதான்.
உன் பங்ச்சுவாலிட்டிதான்.
நம் இருவருக்குமான சந்திப்புகளில்,
அலைகடலை வெறித்துப்பார்க்க வைத்தோ,
புற்களை பிடுங்கச் செய்தோ,
தெப்பக்குளத்தில் கல்லெறியச்செய்தோ,
ஓடுகின்ற பேருந்துகளை எண்ண வைத்தோ,
எனை நீ காக்க வைத்திருந்ததில்லை.
அலைகடலை வெறித்துப்பார்க்க வைத்தோ,
புற்களை பிடுங்கச் செய்தோ,
தெப்பக்குளத்தில் கல்லெறியச்செய்தோ,
ஓடுகின்ற பேருந்துகளை எண்ண வைத்தோ,
எனை நீ காக்க வைத்திருந்ததில்லை.
ஏதோ ஒரு காரணத்திற்காக
ஒரேயொரு நாள் தாமதமாய் வந்து
சமாதானமாய் எனைக் கொஞ்சியபோது
இதுதான் சாக்கென்று நான் சொன்னேன்.
ஒரேயொரு நாள் தாமதமாய் வந்து
சமாதானமாய் எனைக் கொஞ்சியபோது
இதுதான் சாக்கென்று நான் சொன்னேன்.
“இனிமேல தாமதமாய் வரும்
ஒவ்வொரு முறையும்
நீ எனக்கு ஒரு முத்தம் தந்துடணும்
அப்போதான் சமாதானம் ஆவேன் என்று”
ஒவ்வொரு முறையும்
நீ எனக்கு ஒரு முத்தம் தந்துடணும்
அப்போதான் சமாதானம் ஆவேன் என்று”
அன்றிலிருந்து இன்றுவரை நீ
தாமதமாய்,
தாமதமாய் மட்டுமே வந்திருக்கிறாய்
தாமதமாய்,
தாமதமாய் மட்டுமே வந்திருக்கிறாய்
கள்ளி!!!! இப்போதும் சொல்லுவேன்.
முன்னை விட இப்போதான்
உன் பங்ச்சுவாலிட்டி ரொம்ப பிடிச்சிருக்கு.
முன்னை விட இப்போதான்
உன் பங்ச்சுவாலிட்டி ரொம்ப பிடிச்சிருக்கு.
No comments:
Post a Comment