Tuesday, August 10, 2010

முத்தங்கள் - 1

முத்தமும் அவளும்...


முத்ததிற்காக
கெஞ்சிக்கொண்டு நின்றதில்லை
இதுவரை அவளிடம்...!

முத்ததிற்காக
கெஞ்ச வைத்ததில்லை
இதுவரை அவளும்....?!






என்ன
ஒரு வேதனை...?
ஒரு உயிர்...
இரண்டு உடல்களில்
பிரிந்து
கிடக்கிறதே..?!




சாதுக்கள்' அல்ல..!?!


இரவு உடையில்...
இருக்கும்போது 


தயவுசெய்து 

நான் அனுப்பும் கவிதைகளை....

படிக்கும் விஷ பரீட்சையில் 
இறங்கி விடாதே...

என்னைபோல்...


என் கவிதைகள்
'சாதுக்கள்' அல்ல..!?!



உன்னை தவிர...!



நீ பயணிக்கும் 
அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்...,

என் காதலை..
உன்னை தவிர...!






முத்தங்களில்.. 
காதல் சொல்வதில் 
உனக்கு நிகர் 
நீதான்...

எதிர்பாராத நேரத்தில் 
அழுத்தமாய் 
பல திருப்பங்களை 
கொடுத்து 
அழகாக்குகிறாய் 
'வாழ்க்கையை' போல..?!

நீ எடுத்துகொண்டு திருப்பி தராமல்
வைத்துகொண்ட என் இதயத்தை போல...
நானும் ஒருவேளை எடுத்துகொண்டால்
திருப்பி தரமாட்டேன்
உன் இதழை...!!



பிடிவாதக்காரி..!

நீ
எனக்கு
மிகவும் பிடித்த...
குறும்புக்கார
பிடிவாதக்காரி..!?


"நீ
என்னை 

நேசிக்கிறாய்" 
என்று சொல்வதை விட..

"நீ
என்னை 

பிரியமாட்டாய்" 
என்று சொல்வதைத்தான்
நான் 

அதிகம் விரும்புகிறேன்..?!

(நன்றி: Sathish)

No comments:

Post a Comment