Thursday, August 12, 2010

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்...

Sex
மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி 'ஹார்டுவேர்' போல 'சாப்ட்வேரும்' அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் 'ஹார்ட்' ஆக இருக்க வேண்டியதில்லை. 'சாப்ட்' ஆகவும் இருப்பது அதீத அவசியம்.

எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.

வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. 

'வெரைட்டி'யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். 

அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு 'ஆட்டத்தில்' இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.

அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு 'பிளான்' செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை.

உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, 'இன்னிக்கு என்ன பன்னப் போறானோ' என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல 'பொசிஷன்' குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் - முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.

செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும். முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை!

மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர் ஷர்மிளா




திருமணம் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் நிகழும் தித்திக்கும் திருப்பு முனை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதற்கு நேரிடையாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாமல் பார்த்தால் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத்தான் இப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அண்மை காலங்களில் ரொக்கத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதனால் பல குடும்பங்கள் சீரழிந்த கதையையும் நாமறிவோம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமண உறவு இனிக்கவும் மணக்கவும் செய்ய வேண்டாமா? நேற்று வரை நீயாரோ, நான் யாரோ, என்றிருக்கும் இரண்டு உள்ளங்கள் திருமணம் என்கின்ற உறவு வளையத்துக்குள் நுழைந்து இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்று வாழ்க்கையின் ஆத்திச்சூடியை ஆரம்பிக்கும் இவர்களின் இல்லற பாடம் ஆயுளின் அந்திவரை வாசம் வீச வேண்டாமா? வீச வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்.

பெரிய வித்தை ஒன்றும் இல்லை. எந்த பல்கலைக்கழகங்களிலும் சென்று பாடம் படிக்க தேவையில்லை. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி... என்கிற அடிப்படையில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் கதைதான் நமக்கு பால பாடம். இல்லறம் சிறக்க மணமக்களுக்கு எளிய சில ஆலோசனைகள். இதில் இரண்டு விதமான ஆலோசனைகள் அவசியம் ஆனது. ஒன்று மனோரீதியானது இன்னொன்று உடல் ரீதியானது.




கருத்து ஒற்றுமை



தம்பதிகள் இரு வரும் கருத்தொருமித்த வர்களாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டுதான் நம் பெரியவர்கள் ஈருடல் ஓருயிர் என்றார்கள். வாழ்க்கை யெனும் ஒரு வழிப்பாதையில் இருவர் பயணிக்கும்போது ஒருமித்த கருத்து அமைந்திருக்கு மெனில் வாழ்க்கை இனிக்கும். அன்பு மணக்கும். கருத்து ஒற்றுமை நிகழமணமான புதிதில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும். ஒருவர் பேச்சை இன்னொருவர் கேட்க வேண்டும். சுதந்திரமாக பேசருவர் இன்னொருவரை அனுமதிக்க வேண்டும்.



புரிந்துகொள்ளல் அவசியம்



மனைவிக்கு தெரியும்படியாக அவளை புரீந்துகொள்ள முயற்சிக்காதே என்கிறார் ஓஸோ ரஜனீஷ். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை சங்கீதம் பிசிறின்றி, அதி பேதமின்றி, அபஸ்வரமாக அரங்கேறாமல், அதிசுத்த மாக வெளிப்பட கணவன் மனைவி பரஸ்பரம் புரீந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


நாம் எப்படி உணர்வுகள் கொண்டிருக்கின்றோமோ, அதே உணர்வு, தனது வாழ்க்கை துணைக்கும் தனது வாழ்க்கை துணைக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக பங்கேற்க இயலும். உன் புன்னகை என் இதழ்களிலும் தொற்றும், என் கண்ணீர் தீ உன் விழியிலும் பற்றும் என்பதுதான் அன்பான தம்பதியரின் மன இலக்கணம். இதனால் அன்பின் ஆழம் இன்னும் இன்னும் வேர்விட்டு பாயும்.


இன்றைய மணமக்கள்தான் நாளைய தம்பதிகள். இருவரும் இல்லறம் தொடங்கிய நாள் தொட்டு அன்பின் அடிப்படையில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வது அவசியம். பல தம்பதிகளிடம் நடைபெறும் சண்டைகளில் பிரதானமாக பரஸ்பரம், நம்பிக்கையின்மை இல்லாததை காண முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை வீண் சந்தேகத்தை விரட்டி அடிக்கும்.


கணவனோ, மனைவியோ, ஒருவர் மீதான இன்னொருவரின் பாராட்டுதல்கள், விமர்சனங்கள், ஊக்கமளித்தல் அவசியம் ஆகும். இதன் காரணமாக ஒருவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளை ஜீரணித்து கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். பாராட்டை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாதல்லவா. அதே சமயம் அதிகப்படியான பாராட்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தலாம் எச்சரிக்கை.


கணவன்தான் ஆண், தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்கிற ரீதியில் செயல்பட கூடாது. மனைவியும் அற்பதனமான விசயங்களை தனது பிரச்சினையாக்கி, அதற்கு கணவன் செவிமடுக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஒருவர் பிரச்சினையை இன்னொரு வர் பொறுமையாக கேட்க வேண்டும். விவாதிக்க வேண்டும். சரியான முடிவை நோக்கி ஆலோசிக்க வேண்டும்.


கணவனோ, மனைவியோ அழகுணர்ச்சி அவசியம். பெரும்பாலான தம்பதிகள் திருமணமான புதிதில் பாதுகாக்கும் தங்கள் அழகை, உடம்பை நாளடைவில் அக்கறையின்றி விட்டுவிடுவார்கள். இது தவறு. தங்கள் உடம்பை, அழகை பேணி பாதுகாப்பது தம்பதியருக்கு இனிமையான நிமிசங்களையும், நல்ல எண்ணங்களையும் உருவாக்கி தரும்.


இயல்பாக இருக்கும் பாலியல் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக மட்டுமே திருமணத்தை கருதாமல், பரஸ்பரம், அன்பையும், பரிவையும் காட்டும்படியான இணக்கத்துடன் தம்பதிகளிடையே பாலியல் உணர்வுகள் வெளிப்படவேண்டும்.

ஆரம்பத்தில் ஆர்டீசியன் ஊற்றாய் பெருக்கெடுக்கும் செக்ஸுவல் உணர்வுகளும், பரிமாற்றங்களும் காலப்போக்கில் குறைந்துபோய்விடுவதும்கூட பல தம்பதிகளிடைய நிகழ்கிறது. இப்படி அல்லாமல் வாழ்க்கையின் அடிநாதமாக செக்ஸ் உறவு தொடர்ந்து அமைந்திருக்கும் மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தம்பதியர்களுக்கு இடையேயான செக்ஸ் உறவு ஒப்பந்த அடிப்படையில் அமைந்திருக்கக்கூடாது. அத்தகைய பழக்கத்தையும் வளர்த்துக்கொள்வது தவறு. அதாவது, இதை வாங்கித்தாருங்கள், இதை நிறைவேற்றுங்கள், இதை பூர்த்தி செய்யுங்கள் என்று வர்த்தக தொணியில் செக்ஸ் பரிவர்த்தனை அமையக்கூடாது. வியாபாரத்திற்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கும். வாழ்க்கைக்கு பொருந்தாது. இத்தகைய மனச் சிக்கல்களை வளர்த்துக்கொண்டு இல்லற சுகம் காண்பதில் இடையூறுகளை அனுபவிக்க வேண்டாம். செக்ஸ் விஷயத்தில் ஒருவருக் கொருவர் வற்புறுத்தல்களோ, கட்டாயப்படுத்தலோ கூடாது. இதனால் சந்தோஷத்திற்கு இடைஞ்சல் ஏற்படலாம். ஒருவர் இன்னொருவர் விருப்பத்திற்கு இணங்காமல் போகலாம். ஆரம்பத்திலேயே இத்தகைய எண்ணங்களை இருவரும் தவிர்ப்பது நல்லது.உணர்வுகளை மதிப்பது, செக்ஸ் விஷயத்திலும் நடைபெற வேண்டும். உணர்வுகளை மதிக்காத தம்பதிகளிடையே பரஸ்பர செக்ஸ் பரிவர்த்தணை திருப்திகரமாக இருப்பதில்லை. இருவருக்கும் பொதுவான திருப்தி இதனால் தடைபடும்.

கணவன்-மனைவி இருவரும் செக்ஸ் விருப்பங்களை, தேவைகளை , சந்தேகங்களை விவாதித்து, தங்களுக்குள் செக்ஸ் அறியாமையை அகற்றிக்கொள்ள வேண்டும். இது அவர்களின் பாலியல் பரிவர்த்தணைக்கு மேலும் மெருகூட்டலாக அமையும். தகுந்த பாலியல் மருத்துவரை கலந்தாலோசிப்பதில்கூட தப்பில்லை.

புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு முன் மருத்துவ ஆலோகனை பெறுதலோ, பரிசோதனை செய்து கொள்வதோ தேவையற்ற ஒன்றாகத்தான் கருதப்படும். மிகவும் நெருங்கிய உறவில் மணமுடிப்பதை தவிர்ப்பது நல்லது.

திருமணத்தன்றே இல்லற சுகம் காணவேண்டும் என்பதில்லை. தம்பதியரின் விருப்பமே இதில் முக்கிமானது. முதல்நாள் பாலியல் உறவில் சங்கடங்களோ, கஷ்டமோ இருந்தால் கலங்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது இனிமையான ஒரு நாள். எல்லோருக்குமே சத்தான உணவு அவசியம்தான். மணமக்களும் இதனை கைகொள்வதில் தப்பில்லை. நல்ல மனம் மட்டுமல்ல நல்ல உடம்பும் அவசியம். உடம்பை கட்டுகோப்புடன் வைத்து அதனை களைந்தாலே போதும். நோயின்றி வாழ ஆரம்பித்து விடலாம்.

போட்டிகள், வாழ்க்கையில் தேவையற்ற எண்ணங்களை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படுதல், தகுதி மீறி வளர்ச்சி பெற துடித்தல், பணத்தின் மீதான ஆசை, பதவி மோகங்கள், புகழ் வெறி போன்றவைதான் மனிதனை இன்று ஆளாய் பறக்க வைக்கின்றன. இப்படியான சூழ்நிலையை களைந்து மனிதன் வாழ முற்பட்டாலே போதும். நிச்சயம் ஆரோக்யமுடன் வாழலாம்.

கடைசி நிமிடத்தில் ஆர்பரிக்க வேண்டிய கட்டாயம், எதையும் ஒத்திப்போடும் மனப் பான்மைகூட மனிதனை அவசர சக்திக்கு உள்ளாக்க நேரிடும். இப்படியான பழக்க வழக்கங்களை தவிருங்கள். அவசரம் உங்களை விட்டு ஓடியே போய் விடும்.

அடுத்து-அன்றைய பணியை அன்றே முடிக்க கற்றுக்கொள்ளுதல், நேரந்தவறாமை, செய்ய வேண்டிய பணிகளை மட்டும் மேற்கொள்ளுதல் போன்றவைகளாலும் அவசர கதியான வாழ்க்கை முறையை மாற்றலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக-போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். எனவே பொருளாதார விசயத்தில் நிறைவு பெறும் வகையில் பேராசையின்றி வாழுங்கள்.



Tuesday, August 10, 2010

சமாதானமாய் ஒரு முத்தம்

சமாதானமாய் ஒரு முத்தம்
உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே
உன் பங்ச்சுவாலிட்டிதான்.
நம் இருவருக்குமான சந்திப்புகளில்,
அலைகடலை வெறித்துப்பார்க்க வைத்தோ,
புற்களை பிடுங்கச் செய்தோ,
தெப்பக்குளத்தில் கல்லெறியச்செய்தோ,
ஓடுகின்ற பேருந்துகளை எண்ண வைத்தோ,
எனை நீ காக்க வைத்திருந்ததில்லை.
ஏதோ ஒரு காரணத்திற்காக
ஒரேயொரு நாள் தாமதமாய் வந்து
சமாதானமாய் எனைக் கொஞ்சியபோது
இதுதான் சாக்கென்று நான் சொன்னேன்.
“இனிமேல தாமதமாய் வரும்
ஒவ்வொரு முறையும்
நீ எனக்கு ஒரு முத்தம் தந்துடணும்
அப்போதான் சமாதானம் ஆவேன் என்று”
அன்றிலிருந்து இன்றுவரை நீ
தாமதமாய்,
தாமதமாய் மட்டுமே வந்திருக்கிறாய்
கள்ளி!!!! இப்போதும் சொல்லுவேன்.
முன்னை விட இப்போதான்
உன் பங்ச்சுவாலிட்டி ரொம்ப பிடிச்சிருக்கு.

ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள்

ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள் என்பதை பற்றி. இந்த லிஸ்டை பார்த்தாலே தெரிந்துவிடும் நம் மொத்த வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுப்பற்றிய ஒரு தெளிவு கிடைத்துவிடும்

ஒரு இளம்பெண் இளைஞனிடம் எதிர்பார்ப்பது




1. அழகாக
2. கம்பீரமாக
3. நல்ல வசதியுடன்
4. சொல்வதை பொருமையாக கேட்கணும்
5. கட்டான உடல் அழகு
6. நல்ல உடையணிய வேண்டும்
7. சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட வேண்டும்
8. ரொம்ப ரொமாண்டிக்காக இருக்கணும்












அதே பெண் 35 வயதுக்கு பிறகு என்ன எதிர்பார்ப்பாள்





1. பார்க்க சுமாரான தோற்றம்
2. ஓரளவு வசதி
3. கூட பேசிக்கொண்டு இருக்க வேண்டும்
4. வீட்டு சமையலை ரசித்து சாப்பிட வேண்டும்
5. வேலைகளில் கூட உதவி செய்ய வேண்டும்
6. ரங்கநாதன் தெரு.... எங்கே போனாலும் கூட முகம் சுளிக்காமல் வர வேண்டும்
7. எப்பவாவது திடீர்னு காலேஜ் பசங்க மாதிரி டிரஸ் போடணும் ( மத்தவங்க சிரிச்சாலும் கண்டுக்கபடாது)
8. நான் எந்த மொக்க ஜோக் சொன்னாலும் சிரிக்கணும்.













ஒரு பெண் 40 வயதுக்கு பிறகு ஆணிடம் எதிர்பார்ப்பது





1. ரொம்ப பார்க்கிறதுக்கு பக்கி மாதிரி இருக்க கூடாது.
2. நான் பேசினால் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கணும் தூங்க கூடாது
3. ஒழுங்கா வேலைக்கு போகணும்
4. தொப்பையை மறைக்கிற மாதிரி சட்டை போடணும் ( ஷார்ட் சட்டையெல்லாம் மறந்து விடணும்)
5. வாரத்துக்கு ஒரு முறையாவது ஷேவ் செய்யணும்

















50 வயதுக்கு மேல் பெண் எதிர்பார்ப்பது


1. பொது இடத்தில் எல்லார் முன்னாடியும் கண்ட இடங்களில் சொறிய கூடாது
2. அடிக்கடி கடன் வாங்க கூடாது
3. நேரம் கிடைக்கறப்பல்லாம் தூங்க கூடாது
4. ஒரே மொக்க ஜோக்கையெ பல முறை சொல்லி படுத்தகூடாது
5. எப்பவாவது ஒரு வாரமாவது ஷேவ் செய்ய வேண்டும்








60 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது 



1. சின்ன குழந்தைகளை பயமுறுத்த கூடாது
2. பாத்ரூம் எங்க இருக்குன்னு ஞாபகம் வச்சுக்கணும்.
3. குறட்டை சத்தம் மிக கம்மியாக இருக்கணும்
4. எப்பவும் வெறும் உடம்போடு இருக்க கூடாது
5. பல் செட்டு எங்க வைத்தோம் என்று ஞாபகம் இருக்கணும்
6. ஈசியா ஜீரணமாகிற உணவுதான் பிடிக்கணும்( பிரியாணி ஈசியா ஜீரணம் ஆகிடும்தானே)
7. கிழமை, தேதி எல்லாம் ஞாபகம் இருக்கணும்.







70 வயதுக்கு மேல் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது



1. நல்ல உயிரோடு இருக்கணும்
2. டாய்லட், பாத்ரூம் ஒழுங்கா போய்க்கணும்















80 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது







________________________________ ( ஒண்ணுமேயி்ல்லங்க அதான்)










சொன்னது எல்லாத்துக்கும் மேல பெண்ணும் சரி ஆணும் சரி எல்லா வயதிலும் எதிர்பார்ப்பது பரஸ்பர அன்பும் ஆதரவும்தான். எனவே கடைசிவரை காதலியுங்கள் (உங்கள் மனைவியை மட்டும்)

அன்பு? பாலியல்? திருமணம்?

அன்பு? பாலியல்? திருமணம்? இந்த மூன்றும் இணைக்கப்பட்டவையா???



ஓர் ஆரோக்கியமான குடும்பம் அமைவதற்கு மூன்று பிரதான விடயங்கள் அடிப்படையானது ஆகும். அவையாவன.
1. அன்பு
2. பாலியல்
3. திருமணம்

இந்த மூன்றும் இயற்கையில் இறைவனால் இணைக்கப்பட்டவை. இவற்றை ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கும் போது ஏன் என்ற விளக்கம் தனியே பொலிவு பெறும். இதன் முக்கியத்துவம் தெரிய வரும். வாழ்க்கை பாதையில் இம்முன்றும் பின்னிப்பிணைத்தே இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று கூட அடையப்படாவிட்டால் குடும்ப வாழ்வு குழப்பமடைந்;ததாக மாறிவிடும்.
திருமணம்
ஓர் ஆணும் ஓர் பெண்ணும் அன்பில் ஒன்றித்து வாழும் சமூக அமைப்பே குடும்பம் ஆகும். மாறி வரும் சமுதாய சூழலில் குடும்பம் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் மணவாழ்வின் அடிப்படை நோக்கம் நிறைவு செய்யப்பட வேண்டும். திருமணத்தின் நோக்கமே தெளிவில்லாத போது நோக்கத்தின் படி வாழ முடியாது. எனவே நான் யார்? என்னுடைய குணநலன்கள் என்ன? என்று அறிந்து கொள்ள வேண்டும். குடும்பம் தான் சமுதாயத்திற்கு அடித்தளம். சமூக கண்ணோக்கில் திருமணம் என்பது ஆண் பெண் இருவர் ஒருமனப்பட்டு ஓரளவிற்காவது ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து உறுதியாக இறுதி வரை இணைந்து வாழ்வோம் என்று சமுதாயத்தில், சமுதாயத்தோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம் மட்டுமல்ல இறைவனோடும் எற்படுத்திக் கொள்ளும் புனித உடன்படிக்கையாக நோக்கப்படுகின்றது. திருமண சடங்கில் இருமனங்கள் இணைவது மட்டுமன்றி இவ்விருமன ஒன்றிப்பினால் இருபெரும் ஆறுகளாக திகழும் இருவேறு குடும்பங்களும் சங்கமம் ஆகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் இணைந்திருக்க இருவரும் இசைகின்றனர். எனவே இவ்வாறு புனிதத் தன்மை வாய்ந்த திருமணமானது திருமணத்திற்கு முன்னரான பாலியல் தொடர்பினால் களங்கம் அடைவதுடன் அவர்களின் மனதில் பல உளத்தாக்கங்களையும் எற்படுத்துகின்றது. எனவே
இவ்வாறான தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு திருமணம் பற்றிய அர்த்தத்தை அறிவதற்கான கல்வி இன்றியமையாத ஒன்றே. திருமணம் தொடர்பான பாடத்திட்டங்களை பாடசாலைக் கற்கை நெறியிலும் சமய பிரசங்கங்களிலும் உள்வாங்குவதன் மூலம் திருமணம் பற்றிய விழிப்புணர்வை நமது இளம் சந்ததியினர் மத்தியில் ஏற்படுத்துவதன் ஊடாக வாழ்வை மேன்மையடையச் செய்ய முடியும்.

"கண்ணால் அடிபட்டு
வாயால் வாக்கு வாத‌ப்பட்டு
கைகலப்பு ஏற்பட்டு
உன் தேக‌ம் கைப்பற்றி
மனம் அதை மாற்றி
நெஞ்சத்தைக் கொள்ளையடித்து
கர்ப்பத்துள் குடியேற்றி
வாரிசை உருவாக்கி
ராச்சியத்தைக்…
கட்டி ஆளப் போறேனடி."

அன்பு 

அனைத்து சமயங்களிலும் அன்பானது முக்கியத்துவப்படுத்துப்பட்டு கூறப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் அன்பு செய்யும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளனர். அன்பு இரு வகையாக பிரிக்கலாம்.
1) ஆளுகின்ற அன்பு
2) ஆட்பட விரும்புகின்ற அன்பு
ஆளுகின்ற அன்பு
ஆளவிரும்புகின்ற அன்பு தன்னலம் மிக்கது, பிறரை தமது நலன்களை அடைய
பயன்படுத்தும் அன்பு ஆகும். கட்டிளம்பருவத்தில் ஏற்படக்கூடிய பெரும்பாலான காதல் உறவு இவ்வாறான ஆளுகின்ற அன்பை அடிப்படையாக கொண்டு எழுகின்றது. இது உடற்கவர்ச்சியாலும் பாலுணர்வு உந்தல்களாலும் உருவாகின்ற ஒன்றாகும். இவை இறுதியில் திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பிற்கு இட்டுச் செல்வதுடன் அவர்களின் புனிதமான கற்பை களங்கம் செய்வதாகவும் அமைந்து விடும்.
ஆட்பட விரும்புகின்ற அன்பு
இந்த அன்பு தியாகம் மிக்கதும் பரிவு மிக்கதும் ஒவ்வொருவருடைய உணர்வை மதிப்பதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து திருமண பந்தத்தில் இணைந்து வாழவும் வழி செய்வதுடன் ஒருவரை முழுமையாக்குகின்றது.

அன்பு வெறும் வெளிப்படையான கவர்ச்சி வாழ்க்கையிலோ அல்லது வளர்ச்சியிலோ அல்லது உதட்டளவிலோ “நான் உன்னை அன்பு செய்கின்றேன்” என்று சொல்வதிலோ அன்பு வந்து விடுவதில்லை மாறாக அன்பு என்பது ஒர் உயர்ந்த உறவாகும். இந்த அன்பு என்னும் உறவு கணவன் மனைவியிடையே வளர வேண்டுமாயின் ஒருவர் இன்னொருவர் மீது தன்னலமற்ற ஈடுபாட்டை வெளிப்படையாக மட்டுமன்றி உள்ளுணர்வுடனும் காட்ட வேண்டும். குடும்பத்தில் தாம்பத்திய உறவின் முக்கியத்துவத்தை அன்பு தீர்மானிக்கின்றது.

திருமண அன்பினால் குடும்பத்தில்; அல்லது தாம்பத்திய வாழ்வில் எற்படும் நன்மைகள்
* தனிமையை போக்குகின்றது.
* இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கின்ற மனநிலை.
* ஆழ்ந்த உறவிற்கு நம்மை கொண்டு செல்கின்றது.
* ஆளுமை வளர்ச்சிக்கு வழி செய்கின்றது.
* புத்துயிர் கொடுக்கும் அன்பாக மாறுகின்றது.


தீர்வுகள்
திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பு தாம்பத்திய வாழ்வை பாதிக்கின்றது என்பது ஆய்வின் மூலம் தெளிவாகின்றது. பாதிக்கப்பட்டோர் குடும்ப உறவில் அன்பை பொருத்தமான முறையில் வெளிபடுத்த முடியாதவர்களாகவும், அன்பை எற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும்

காணப்படுகின்றனர். இதற்கு காரணம் தாம் தவறு இழைத்து விட்டோமே தமது வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவர்களது வாழ்வில் குழப்பத்தை எற்படுத்துகின்றது.

குடும்ப உறவில் அன்பு வலுப்பட
* ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்து செயற்படல்.
* ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.
* தனித்தன்மையை இணைந்த அன்பிலும் இடைவெளிகள் இருக்க வேண்டும். அப்Nபுhது தனித்தன்மை சிறப்பு பெறும்.
* ஒருவர் கொண்டுள்ள ஈடுபாட்டில் மற்றவர் அக்கறை காட்டி அதில் வெற்றி அடையச் செய்தல்.
* பாராட்டும் குணத்தை வளர்த்தல.
* ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபடலும் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்தலும்
பாலியல் 
அன்பும் பாலியல்பும் நெருங்கிய தொடர்பு உடையன. ஆயினும் இரண்டும் ஒன்றல்ல. ஆனால் நம்மில் பலர் இரண்டு ஒன்று போலத் தான் கருதுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் இல்லற தன்மையையும் இனப்பெருக்கச் செயலையும் இணைத்துப் பார்ப்பது தான். இதற்கு காரணம் நமது பண்பாட்டில் பாலியலை இனப்பெருக்கச் செயலோடு மட்டுமே தொடர்பு படுத்தி வந்திருப்பது தான். இது உண்மைதானா? என்று ஆராயப்பட வேண்டிய ஒன்றே. செக்ஸ் என்றதுமே சமுதாயத்தில் பலருக்கு குறகிய கண்ணோட்டதில் தான் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் செக்ஸ் என்பது படுக்கையறை பின்ணனியை மட்டும் வைத்து புரிந்து கொள்ள வேண்டிய குறுகிய அர்த்தம் உள்ள சொல் அல்ல. அது மிகவும் பரந்த அர்த்தமுள்ள ஒரு சொல். ஓர் ஆண் பெண்பாலாரோடு பழகினாலோ பேசினாலோ அல்லது ஒரு பெண் ஆண்பாலாரோடு Nபுசினாலோ பழகினாலோ அதுவும் ஓர் பாலியல்பு சார்ந்த செயற்பாடு ஆகும். ஒர் ஆண் பெண்ணை பாசத்தோடும், பரிவோடும், பார்த்தாலும,; பழகினாலும், அது ஒர் பாலியல்பு செயற்பாடு ஆகும். இத்தகைய பாலியல்பு எல்லா நேரமும் இனப்பெருக்க உறுப்புக்களைத்தான் தொடர்புபடுத்துகின்றதா? உறுதியாகவே இல்லை. சிலர் உடல் இன்பத்தையம் பாலியல்பையும் சமனாக கருதுகின்றனர். ஆனால் இவற்றை இரண்டு வகையாக ஆராயலாம்.
1) உணர்வார்ந்த பாலியல்பு.
2) உடலுறவு பாலியல்பு.
உணர்வார்ந்த பாலியல்பு 
உணர்வார்ந்த பாலியல்பு என்பது விரிவாக நோக்கப்பட வேண்டிய ஒன்று. மனிதர்களின் எல்லா வகையான உறவு முறைகளில் எல்லாவிதமான வாழ்வு நிலையிலும் இது செயற்படத்தான் செய்யும். ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும் போது ஒரு வித கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். அது போலவே ஒரு பெண் ஒரு ஆண்ணைப் பார்க்கும் போது ஒருவித ஈர்ப்பை உணரலாம் இது தவறல்ல. ஆனால் அந்த ஈர்ப்பை சுற்றி எந்த விதமான மனப்போக்கை நோக்கத்தை எண்ண ஓட்டத்தை அனுமதிக்கின்றோமோ அதற்கேற்ப இயல்பாக எழுந்த உணர்வு வெவ்வேறு வடிவத்தைப் பெறும் இது அன்பின் பரிமானமாக பரிமளிக்கின்றதா? காதல் உறவில் ஈடுபடுவோர்களுக்கிடையே எற்படுகின்ற ஈர்ப்பானது அவர்களில் எற்படும்; எண்ணம், மனப்போக்கு உணர்வு, நோக்கம் போன்றவை திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பை தீர்மானிக்கின்றது.
உடலுறவுப் பாலியல் 

உணர்வார்ந்த பாலியல்பு பலவகைப் பரிமானங்களை கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் உடலுறவு பாலியல்பு ஆகும். இவை திருமணம் என்கின்ற கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். இங்கு ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பிறக்கின்ற பிள்ளையை பேணிப் பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும். திருமணத்திற்கு முன்பு உடலுறவு பாலியல்பிற்கு இடமளிப்பதனால் திருமணத்தின் பின்னரான அன்புறவில் சிக்கலை ஏற்படுத்துவதனால் அவர்களின் குடும்ப வாழ்வு குழப்பமடைகின்றது.
திருமண உறவு என்பது உடலுறவு கொள்வதன் நோக்கமல்ல. அன்புறவில் இருவர் ஐக்கியத்தால் ஒருவர் ஆவதே இதன் நோக்கமாகும்.
உடலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் 

பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பானது அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இளவயது கர்பப்ம்;, கருச்சிதைவு, போன்றவற்றுடன் பாலியல் தொற்று நோய்களும் ஏற்பட வாய்புண்டு. அவ்வாறான நிலைமைகளில் அவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களது இரகசியத்தன்மையும் பேணப்படவேண்டும். எனவே யாழ் போதனா வைத்தியசாலையானது பொருத்தமான வைத்தியசாலையாகும்;. பாலியல் தொற்று நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் தென்படின்

* பாலுறுப்பக்களில் இருந்து மஞ்சள், வெள்ளை பாயம் வெளியேறல்
* சிறு நீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி அடிவயிற்றில நோ பாலுறுப்புக்களில் பொக்களஙக்ள் காணப்படல்.
* புண்கள் காணபப்டுதல் போன்ற அறிகுறிகள் காணப்படின் யாழ் Nபுhதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள (அறை இல 33 பாலியல் நோ தடுப்ப சிகிச்சை நிலையத்திற்கு சென்று பாலியல் நோய்கள் தொடர்பான சிகிச்சைகளை நம்பகத்தன்மையுடம் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் ஏனைய வைத்திய சேவை வழங்கும் நிறுவனங்களும் விசுவாசமான நம்பகத்தன்மையான சேவைகளை வழங்க முன்வருவதன் ஊடாக உடலியல் ரீதியிலாக ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
உளவியல் தொடர்பான பிரச்சினைகள்
திருமணத்திற்தகு முன்பான பாலியல் தொடர்பானது உளவியல் ரீதியில் பல்வேறு பட்ட உள சமூக தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. வேலையின்மை, வேலை ஸ்தலத்தில் மற்றும் குடும்பத்தில் மதிப்பிழப்பு அன்புக்குரியவரின் இழப்பு போன்றவற்றால் மற்றவர்களுடனான உறவில பிரச்சினைகள் எற்படுகின்றது. மதுவிற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படுகின்றது. உள சமூகப் பிரச்சினைகளை பின்வருமாறு கையாளலாம்.(உள ஆற்றுப்படுத்தல்)
* அவர்களின் கதையை செவிமடுத்தல்
* சாந்த வழிமுறைகளை கற்பித்தல்
* குடும்ப சமுதாய ஆதரவுகளை திர்ட்டல்
* சமுதாய வளங்களைப்பயன்படுத்தல் இவற்றுடன் குழுச் சிகிச்சை நடத்தை சிகிச்சை முறை மூலமும் அரச அரச சார்பற்ற நிறுவனங்ளின் மூலமும்
நெருக்கீட்டை கையாளும் முறை
பாதிப்பான சம்பவங்களையும் அதனூடக வருகின்ற உடல் உள குடும்ப, சமூக விளைவுகளையும் தாம் இலகுவாக தாங்கிக் கொள்ளவும் அவற்றை சாதகமாக கையாளக்கூடிய வழிமுறைகளை தாங்கிக் கொள்ளலாம். சாதாரண மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட இடர்பாடுகளினால் எங்களில் நெருக்கீடு ஏற்படலாம் என்பதனையும், அதன் காரணமாக மேலே பார்த்த சில – பல விளைவுகள் ஏற்படலாம் என்பதனை அறிந்துணர்ந்து ஏற்றுக் கொள்வதே மிகப் பயனுடைய முதற்படியாக இருக்கும். ஆகவே இவ்வாறான அறிவை தகவலை சரியான முறையில் வழங்குவதே உளக் கல்வியூட்டலின் முக்கிய பங்காக அமைந்திருக்கும்.

நெருக்கீடுகளை கையாளும பொழுது பொதுவாகப் பாவிக்கப்படுகின்ற, பாவிக்கப்படக்கூடிய சில நடைமுறைகளைப் பார்ப்போம்.
உணர்வு மரத்துப் போதல்
இந்நிலையில் நடந்து போன சம்பவங்கள் மனதால் உணரப்படுவது தாமதமாகும். மனம் விறைத்து போய் உணர்ச்சியற்றதாய் இருக்கும்;;. நடந்து முடிந்த சம்பவங்கள் உண்மையற்ற கனவு போன்ற ஒன்றாக தோற்றமளிகக்கும் அதிர்சச்pயான சம்பவங்களை ஆரம்பத்தில மனம் தாங்ககுவதற்குத இது உதவி செய்யும். எனவே இவ்வாறான நேரங்களில் அவசரப்பட்டு நடந்து சம்பவங்கள் பற்றி விபரிக்குமாறு அவரை கேட்காது விடலாம்.

அதீத செயற்பாடு
ஓர் இடத்தில் ஓய்வாக இருக்காமல் குடியாட்டமாக இருக்கும் நிலையாக இது இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் ஒருவர் திருப்தியை அனுபவிக்கலாம். எனினும் அதிக துடியாட்டங்கள் சில வேளைகளில் உண்மையான தேவைகளை விட வேறு அலுவல்களில ஈடுபடவும் வைக்கலாம்.
உணர்வு மரத்த நிலை, அதிகரித்த செயற்பாடுகள் என்பன அளவுக்கதிகமாக இருக்கின்ற போது நெருக்கீட்டின் பாதிப்பபுக்ளில் இருநக்து குணமடைவது தாமதம ஆகலாம். எனவே பொருததமான வேளைகளில இவை எல்லை மீறாது பார்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல்
படிப்படியாக உண்மை நிலையை ஏற்றுக கொள்ள பழக வேண்டும். நடந்த சம்பவங்களை நண்பர்கள், உறவினர்களுடன் கதைத்தல், மனதை அசுவாசப்படுத்தி உண்மை நிலை சம்பந்தமான ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்கு உதவி செய்யும்.

மீள நினைந்திடுதல்
நடந்த சம்பவங்களும் நெருக்கீடுகளும் ஒருவரது மனதை பாதிப்பதனால் அந்த சந்தர்ப்பங்களைப் பற்றி திரும்பத்திரும்ப கதைப்பது நினைப்பது மற்றும் கனவு காண்பது என்பன ஏற்படலாம். மீளமீள வெளிப்படுத்துவதன் ஊடாக மெல்ல மெல்ல ஒருவரது மனம் பாதிப்பான சம்பவங்களை ஏற்றுக் கொள்ள தொடங்குவர்.

ஆதரவான சூழல்
இது மிகவும் முக்கியமானது மற்றவர்களின் சரீர, மன ஆதரவுகளை ஏற்றுக் கொள்ளுதல் ஒருவருக்கு மன அமைதியை தரக் கூடியது. அவர்களைப் போலவே பாதிப்படைந்தவர்களுடன் அளவளாவுவதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் நன்மை பகிர்க்கும். இதன் மூலம் மனதின் பாரங்கள் குறைவதுடன் குழு ஆதரவும் நெருங்கிய உறவுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

தனிமையும் ஓய்வும்
ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளை கையாண்டு அதிலிருந்து மீள்வதற்கு அவருக்கு போதியளவு ஓய்வு தேவைப்படும். சில வேளைகளில் சிலர் தேறுவதற்கு தனிமையான ஒரு சூழலில் இருப்பது அல்லது நெருக்கமான ஒருவருடன் இருப்பது உதவி புரியலாம்.

சாந்த வழிமுறைகள்
ஒருவரில் எற்படுகின்ற உடல் உள சிக்கல்கள் பலவற்றில இருந்து விடுபடுவதற்கு சாந்த வழிமுறைகள் துணைபுரிகின்றன. சுவாசத்தை ஒழுங்காக வயிற்றுத்தசைகளை பாவித்து எடுத்து விடுதல் உடலின் உறுப்புக்களை படிப்படியாக தளர விடுதல் என்பனவும் தியானத்தில் ஈடுபடுதல், மந்திர உட்சாடனம் - ஜெபம் சொல்லுதல் போன்றவை இவற்றுள் அடங்கும் அத்துடன் பிராண யாமம், சாவாசனம் அல்லது சன்னியாசனம் போன்ற யோகாசன முறைகளும் பயனுடையது. அமைதியான இசையைக் கேட்டல், இயற்கையை இரசித்தல், இனிய நினைவுகளில ஆழ்ந்திருத்தல் போன்றன மனதை சாந்தப்படுத்த உதவி செய்யும்.

*
வளமைக்கு திரும்புதல்
ஆரம்பத்தில ஏற்பட்ட அதிர்ச்சியில இருந்து மீண்டு பல்வேறுபட்ட உணர்ச்சி கலவைகளுக்குள் ஆளாகின்ற வேளையிலும் மெல்ல மெல்ல வழமையான பணிகளை ஆரம்பித்தல் பிரியோசனம் உடையதாகும்.
* பொறுப்புக்களை ஏற்றல்
தான் வகிக்க வேண்டிய பாகங்களுடைய பொறுப்பை ஏற்று செயற்படத் தொடங்குதல் அவசியமானதாகும்.
* மனம் ஆறுதல்
மனதின் காயங்களினால் ஏற்படுகின்ற நோவை மாற்றுவதுடன் அவரை முன்னரை விட உறுதியானவராக ஆக்கி விட உதவுகின்றது. ஆனால் சிலவேளைகளில் நெருக்கீட்டின் தாக்கங்கள் மனதின் வடுக்களாக மாறி விடுகின்றன. அத்துடன் அவர்களின் ஆளுமையில் செல்வாக்கும் செலுத்தக் கூடும்.
நெருக்கீட்டை சமூக மட்டத்தில் கையாளுதல்
பாதிக்கப்பட்டவர்களின் நெருக்கீடுகளை கையாளுவதில் சமூக ரீதியிலான பல செயற்பாடுகள் உதவி செய்கின்றன. சமூக நடவடிக்கைகளில் காணப்படும் மக்களின் ஒன்று சேர்கின்ற மகிழ்ந்திருக்கின்ற தங்கள் அனுபவங்களை பகிர்கின்ற போது ஏனையவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்ற என்பதை புரிந்து கொள்ளுகின்ற மற்றவர்களின் ஆறுதலை, அனுதாபத்தை பெறுகின்ற தன்மைகள் சமூக அணுகுமுறையில் பிரதான பங்கு வகிக்கின்றன. அவையாவன
1. பாரம்பரியமான நிகழ்வுகள்
2. விளையாட்டுக்கள்
செய்ய வேண்டியவையும் செய்ய வேண்டாதவையும்
• உணர்ச்சிகளை அடக்கக் கூடாது அவற்றை வெளிப்படுத்தி விடுதல் நன்று
• நடந்த விடயங்களைப் பற்றி கதைப்பதை தவிர்க்க முயல வேண்டாம்
• தங்கள் பிரச்சினைகளையும் மன உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டாம். பொருத்தமான நேரத்தில அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி அதனை ஊக்குவித்து அதற்கான ஆதரவையும் ஓத்துணர்வையும் வழங்கலாம்.
• சம்பவஙக்ள் பற்றிய நினைவுக்ள நீங்கி விடும் என்று எதிர் பார்க்க வேண்டாம். எங்களின் உணர்வுக்ள எங்களுடன் நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடியவை.
• நித்திரை, ஓய்வு, சிந்தித்தல், சார்ந்த வழிமுறைகள் போன்றவற்றிற்கு போதியளவு நேரம் ஒதுக்குதல் நல்லது.
• குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போதியளவு நேரத்தை ஒதுக்குதல் நல்லது.
• சடுதியாகவே எற்பட்ட மாறுதல்களுக்கு பிறகு மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் திரும்புதல் நல்லது இல்லையேல் படிப்படியாக தங்கி வாழும் நிலை ஏற்படும்.
• நம்பிக்கை இழத்தலை தவிர்த்தல் வேண்டும். சிறிய இலக்குகளை வெற்றி கொள்ளுதல், தன்னம்பிக்கையை வளர்க்கும்
• மது, மருந்து துர்பாவனைக்குத அடிமையாகாதவாற இருத்தல் வேண்டும் ஓய்வு நேரங்களில பயனள்ளவாறு கழித்தல் வேண்டும்.
• உளப்பாதிப்புக்கள் இருந்தால் மறைக்க வேண்டாம் தகுந்த உள ஆற்றுப்படுத்துனரை நாடவும்